தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடும் போட்டியால் மேனேஜ்மென்ட் கோட்டா விலை எகிறியது

கடும் போட்டியால் மேனேஜ்மென்ட் கோட்டா விலை எகிறியது

கடும் போட்டியால் மேனேஜ்மென்ட் கோட்டா விலை எகிறியது


UPDATED : மே 11, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், கடந்தாண்டை விட கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளதால், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் கடந்தாண்டை விட 1.5 அல்லது 2 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால், முன்னணி கல்லூரிகளில் இன்ஜினியரிங் சேர்வதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னணி கல்லூரிகளில் ஏராளமானோர், மேனேஜ்மென்ட் (நிர்வாக) கோட்டா சீட்டுக்கு படையெடுப்பதால், அதன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 09-05-11 அன்று வெளியிடப்பட்டதில், தமிழக அளவில் நடப்பாண்டில் 85.9 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் பெரியளவில் மாற்றம் இல்லையெனினும், தனித்தனியே பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.


கணித பாடத்தில் நடப்பாண்டு 2,720 பேர் சென்டம் எடுத்துள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக 1,000 பேர் கணிதத்தில் சென்டம் எடுத்துள்ளனர். இதேபோன்று கடந்தாண்டை காட்டிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதனால், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் 200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது. கடந்தாண்டில் 31 பேர் மட்டுமே இந்த கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். இதேபோல் ஒவ்வொரு கட்-ஆப் மதிப்பெண்ணிலும் இரு மடங்கு மாணவர்கள் அதிகரித்துள்ளனர்.


கட்-ஆப் மதிப்பெண்ணில் 199க்கு மேல் வாங்கியவர்கள் 1,174 பேர், 198க்கு மேல் வாங்கியவர்கள் 2,717 பேரும், 197க்கு மேல் வாங்கியவர்கள் 4,294 பேரும், 196க்கு மேல் வாங்கியவர்கள் 5,881 பேரும், 195க்கு மேல் வாங்கியவர்கள் 7,530 பேரும், 190க்கு மேல் வாங்கியவர்கள் 15 ஆயிரத்து 683 பேரும், 180க்கு மேல் கட்-ஆப் வாங்கியவர்கள் 33 ஆயிரத்து 47 பேரும் உள்ளனர். இதனால், தமிழகத்தின் முன்னணி கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கட்-ஆப் மதிப்பெண் 190க்கு மேல் இருந்தால் மட்டுமே முன்னணி கல்லூரியில் இடம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.


முன்னணி கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற மகன் அல்லது மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர், தற்போது மேனேஜ்மென்ட் கோட்டா சீட்டில் சேர்க்கை நடத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கல்லூரிகள், தன் நன்கொடை கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இதனால் பெற்றோர் தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது, "பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் நல்ல கட்-ஆப் மதிப்பெண் பெற்று விடுவர் என்ற நம்பிக்கையில், நிர்வாக சீட்களில் சேர்க்க ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தற்போது கட்-ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால் விரும்பிய பாடப்பிரிவுகள், விரும்பிய கல்லூரிகளில் கிடைப்பது கடினமான விஷயமாக மாறியுள்ளது. இதனால், முன்னணி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளில் சேர நிர்வாக சீட்டுக்கு பெற்றோர் படையெடுக்கின்றனர்.


அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி. படிப்புகளுக்கு கடும் போட்டி காணப்படுகிறது. தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர, நான்கு லட்சம் ரூபாய் வரை நன்கொடை பெறப்பட்டது. ஆனால், தற்போது இதே பிரிவுக்கு குறைந்தபட்ச நன்கொடையே ஆறு லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, முன்னணி இன்ஜினியரிங் கல்லூரிகளில் நன்கொடை அதிகரிப்பு ஆகியவை பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us