தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டான்செட் நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

டான்செட் நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

டான்செட் நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., -எம்.ஆர்க்., ஆகிய பட்டமேற்படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு (டான்செட்), வரும் 28, 29ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நடக்கிறது.


இத்தேர்வையொட்டி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சிதம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில், வரும் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விசாரணை மையங்கள் செயல்படும். சென்னை, அண்ணா பல்கலை தேர்வு மைய வளாகத்தில், 26, 27ம் தேதிகளில் விசாரணை மையம் இயங்கும். இம்மையங்கள் குறித்த விவரங்களை www.annauniv.edu/tancet2011 என்ற இணையதளத்தில் பெறலாம்.


இத்தேர்விற்கு விண்ணப்பித்தோரில் தகுதியானவர்களுக்கு, ஹால் டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்கள், "The Director, Entrance Examinations, Anna University Chennai" என்ற முகவரிக்கு,
டிடி எடுத்து, தங்களுக்கு விருப்பமான விசாரணை மையத்தில், மாற்று ஹால் டிக்கெட்டை பெறலாம். ஆன்-லைனில் விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதோர், இரண்டு பாஸ்போர்ட் வடிவ போட்டோ ஒட்டப்பட்ட ஒரு வெள்ளைத் தாளில், தாங்கள் இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தின் தலைமையிடமோ, மத்திய அல்லது மாநில அரசு உயரதிகாரிகளிடமிருந்தோ சான்றொப்பம் பெற்று வந்து ஹால் டிக்கெட்டை பெறலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us