தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி பாட திட்டங்கள் மறு ஆய்வு

சமச்சீர் கல்வி பாட திட்டங்கள் மறு ஆய்வு

சமச்சீர் கல்வி பாட திட்டங்கள் மறு ஆய்வு


UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM

ADDED : ஜூன் 04, 2011 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM ADDED : ஜூன் 04, 2011 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் புதிய அரசு அமைந்ததை அடுத்து, சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.


கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் சமச்சீர் பாடத்திட்டம் இல்லை என்று கூறி இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.


தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில், ஆளுநர் உரையில் சமச்சீர் கல்வி குறித்து கூறப்பட்டதாவது  சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தை குறைத்து அதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை. பள்ளிக் கல்வி முறை மாணவர்களின் செயல்முறை அறிவாற்றலையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களைப் பிற மாநில மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்ய வேண்டும்.


ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள பொதுப்பாடத்திட்டம் இந்த நோக்கத்தைச் செய்யப் போதுமானதாக இல்லை. எனவே, சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைத்து இது குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமான பள்ளிக் கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும்.


கல்வி சார்ந்த முக்கியக் குறியீடுகளான பள்ளி சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல், இடைநிற்றலைக் குறைத்தல் போன்றவற்றுடன் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us