தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய கடற் படையில் நிரந்தர நிலை அதிகாரிகள்

இந்திய கடற் படையில் நிரந்தர நிலை அதிகாரிகள்

இந்திய கடற் படையில் நிரந்தர நிலை அதிகாரிகள்


UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM

ADDED : ஜூன் 07, 2011 02:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM ADDED : ஜூன் 07, 2011 02:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் பயிற்சி நிறுவனமான நேவல் அகாடமி எழிமலா கேரளாவின் கண்ணூரில் உள்ளது. இங்கு நிரந்தர நிலை அதிகாரிகளை (பெர்மனென்ட் கமிஷண்டு ஆபிசர்) நியமிப்பதற்கான பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.


லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் பிரிவிலான இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வரும் ஜனவரி 2012 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.


வயது
இந்திய கடற்படையின் பி.சி.,லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 1/2 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1987 முதல் 01.07.1992க்குள் பிறந்தவர்கள் மட்டும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி
லாஜிஸ்டிக்ஸ் பிரிவு பதவிக்கு பி.காம்., எம்.காம்.,பி.ஏ மற்றும் எம்.ஏ., பொருளாதாரம், எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., எம்.சி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி.,(ஐ.டி.,), பி.டெக்., (ஆர்கிடெக்சர்) மற்றும் சிவில் இன்ஜினியரிங் தவிர்த்த பிற ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் தகுதி, ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உடல் தகுதி
இந்தியக் கடற்படையின் பி.சி.,லாஜிஸ்டிக்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும் வண்ணக் குறைபாடு மற்றும் மாலைக் கண் நோய் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.


தேர்ச்சி முறை
விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் இரண்டு நிலைகளில் நடத்தப்படும் நேர்காணல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இத்தேர்வு பெங்களூரு, கோவை, போபால் ஆகிய மையங்களில் நடத்தப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி
மேற்கண்ட தகுதி உடையவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கவரின் மேற்பகுதியில் குறிப்பிட்டு பின் வரும் முகவரிக்கு 07.06.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களை அறிய பின்வரும் இணைய தளத்தைப்பார்க்கவும்.


முகவரி
Post Bag No.04,
RK Puram PO,
New Delhi - 110 066.


விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.06.2011


இணையதள முகவரி: www.nausena-bharti.nic.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us