தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தமிழகத்தில் குறைவு:

மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தமிழகத்தில் குறைவு:

மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தமிழகத்தில் குறைவு:


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசு பணிகளுக்கு, தமிழகத்திலிருந்து குறைவான பேர் தான் விண்ணப்பிக்கின்றனர் என, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) தலைவர் ரகுபதி கூறினார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பணியாளர் தேர்வாணைய தென்மண்டல அலுவலகம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இங்கு பணியாற்றும் அலுவலர்கள், பிற மண்டல அலுவலகங்களுடன் எளிதில் தொடர்புக் கொள்ளலாம். எங்களது தென்மண்டல அலுவலகத்தின் சிறப்பான பணிக்காக, ஐ.எஸ்.ஓ., 9001:2008 தரச்சான்று தரப்பட்டுள்ளது.


நாங்கள் நடத்தும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இதனால், இத்தேர்வுகளை ஆன்-லைனில் நடத்த தற்போதைக்கு வாய்ப்பில்லை. போட்டியாளர்கள் அனைவரும், தேர்வுகளில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணை, www.ssc.nic.in, www.sscsr.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். கடந்த 2010-11ம் நிதியாண்டில், மத்திய காவல் படை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, அனைத்து மண்டலங்களிலிருந்தும், 68 லட்சம் விண்ணப்பங்களும், தென்மண்டல அளவில், மூன்று லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்களும் பெறப்பட்டன.


இவற்றில், நாடு முழுவதும் 23 ஆயிரத்து 500 பேரும், தமிழகம் மற்றும் ஆந்திராவை உள்ளடக்கிய தென்மண்டலத்தில், 1,191 பேரும் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது, மத்திய காவல் படையில் காவலர் பணி உள்ளிட்ட 15 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் புதிய பணி வாய்ப்புகளையும், தென்மண்டலத்தில், 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கவும், இலக்கு நிர்ணயித்துள்ளோம்.


மத்திய அரசு பணிகளுக்கான விண்ணப்பங்களில் 70 சதவீதம், டில்லி, உத்தர பிரதேசம், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து தான் பெறப்படுகின்றன. இம்மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்திலிருந்து மத்திய அரசு பணிகளுக்கு குறைவான பேர் தான் விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு ரகுபதி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us