தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

ஐ.ஏ.எஸ்., முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

ஐ.ஏ.எஸ்., முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 16, 2011 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 16, 2011 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவச பயிற்சியை அளிக்க, தமிழகம் முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்ந்தெடுக்கிறது.


இது குறித்து, அம்மைய இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது: சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் சார்பில், வரும் 2012ம் ஆண்டு நடக்க உள்ள முதல் நிலை தேர்விற்கு 10 மாத இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.


இப்பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில், நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.


நுழைவுத் தேர்வு, ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம், மைய இணையதளத்தில் வெளியிடும். இப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.saidais.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கான பயிற்சி, வரும் 19ம் தேதி முதல், செப்டம்பர் இறுதி வரை நடைபெறும்.


இப்பயிற்சி வகுப்புகளுக்கு மையத்தில் பயிற்சி பெறாத, பிற புதிய மாணவர்களும் அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ளோர், அனுமதிச் சீட்டு, புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us