பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு
பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு
UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM
ADDED : ஜூன் 21, 2011 11:02 AM
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களுடைய கல்வித் தகுதியை எந்தவித சிரமமும் இன்றி, அவரவர் பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் இருந்துகொண்டே, தங்கள் கல்வித் தகுதியை ஆன்லைன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் விதமாக பள்ளிகளில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டிருந்தது.
பதிவுக்காக ஏற்கனவே மாணவர்களிடமிருந்து ரேஷன்கார்டு நகல், முகவரி போன்றவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றிருந்தனர். இவற்றை மதிப்பெண் சான்றிதழுடன் ஒப்பிட்டு பார்த்தபின், பதிவு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இப்பணி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது என்றாலும், பதிவு மூப்பு 20ம் தேதி என்றே கணக்கிடப்படும்.