தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தேர்வு துறையில் பணியாளர் நியமனம் எப்போது?

அரசு தேர்வு துறையில் பணியாளர் நியமனம் எப்போது?

அரசு தேர்வு துறையில் பணியாளர் நியமனம் எப்போது?


UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM

ADDED : ஜூலை 10, 2011 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM ADDED : ஜூலை 10, 2011 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: கல்வி அமைச்சகத்தில் அரசு தேர்வுத் துறையும் உள்ளது. இத்துறையில் ஏராளமான காலியிடங்கள் இருப்பதால், பணிகளில் பெருமளவு தேக்கமும், பாதிப்பும் ஏற்படுகிறது.


பல ஆண்டுகளாக பணிநியமனம் செய்யப்படாததால் இருக்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து, தரமற்ற பணிகளே நடக்கிறது என கல்வித்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.அரசு தேர்வுத் துறையானது சென்னையில் தலைமையிடத்தையும், திருச்சி, வேலூர், கோவை, மதுரை, நெல்லை என 7 நகரங்களில் துணை இயக்குனர் அலுவலகங்களையும் கொண்டுள்ளது. அனைத்து அலுவலகங்களுக்குமான பணியிடங்கள் மொத்தம் 700.


இவற்றில் 300க்கு மேற்பட்ட, அதாவது பாதியளவு இடங்கள் காலியாகவே உள்ளன. 7 மண்டல அலுவலகங்களிலும் செயலாளர் பணியிடமும், சென்னை தலைமையிடத்தில் 3 அதிகாரிகள் பணியிடம் உட்பட பல இடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் மாதம் நான்கு முதல் ஏழுபேர் வரை ஓய்வு பெறுவதால் காலியிடங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


தேர்வுத் துறை பணிகள்: அரசு தேர்வுத் துறையில் 40க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், அக்டோபரில் நடைபெறும் எட்டாம் வகுப்பு, மெட்ரிக்., எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, உடனடி மறுதேர்வுகள், ஓரியண்டல், தையல், இசை உட்பட தொழில்நுட்ப தேர்வுகள், சிறப்பாசிரியர்களுக்கான தேர்வுகள் என 40க்கும் மேற்பட்ட வகை தேர்வுகளை நடத்தி, திருத்தம் செய்து, முடிவு வெளியிட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்குகின்றனர். இதற்கு போதிய ஆட்கள் இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.


மேலும் மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட பின் ஏராளமானோர் திருத்தம் பெற வருகின்றனர். முன்பெல்லாம் 200 பேர் வரை வந்தாலே அதிகம். ஆனால் தற்போது 500 முதல் 1000 பேர் வரைகூட வருகின்றனர். மாணவர்களுக்கு மறுமதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவும் காலதாமதமாகிறது. இதனால் ஒரு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த மாணவரே, உடனடி மறுதேர்வுக்கும் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.


பிளஸ்2 முடித்தபின், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் என தொழில் கல்வி படிக்கும் மாணவர்கள் பல்கலை, கல்லூரிகளில் சேருகின்றனர். அவர்களது மதிப்பெண் பட்டியலின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க தேர்வுத் துறைக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்படுகிறது. ஆனால் ஊழியர் பற்றாக்குறையால் அதை சரிபார்த்து உண்மைத் தன்மையை அனுப்ப ஆண்டுக்கணக்கில் ஆகிறது. இதனால் மதிப்பெண் பட்டியல்கள் மலைபோல் தேங்குகின்றன. எனவே, அரசு தேர்வுத் துறைக்கு போதிய பணியாளர்களை உடனே நியமிப்பது அவசியத்திலும் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us