தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தாள் வேலை பார்த்த மாணவிக்கு உதவி குவிகிறது

சித்தாள் வேலை பார்த்த மாணவிக்கு உதவி குவிகிறது

சித்தாள் வேலை பார்த்த மாணவிக்கு உதவி குவிகிறது


UPDATED : ஆக 01, 2011 12:00 AM

ADDED : ஆக 01, 2011 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2011 12:00 AM ADDED : ஆக 01, 2011 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஜினியரிங் கல்லூரியில் சீட் கிடைத்தும், சித்தாள் வேலை பார்த்து வந்த ராஜபாளையம் மாணவி சூர்யாவுக்கு, கோபால்சாமி எம்.எல்.ஏ., 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

தினமலர் வாசகர்கள் உதவ முன்வந்ததால், மாணவி மகிழ்ச்சியில் உள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்குமலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா, 17. தந்தை இல்லை; தாய் விஜயலட்சுமி சித்தாள் வேலை பார்த்து, சூர்யாவை படிக்க வைத்தார்.

எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, கவுன்சிலிங்கில் பங்கேற்றதில், மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரி கட்டணம் செலுத்த பண வசதி இல்லாததால் சூர்யா, சித்தாள் வேலைக்கு தாயுடன் சென்று வந்தார்.

இது குறித்த செய்தி, தினமலர் இதழில் வெளியானது. அன்று மட்டும், 30க்கும் மேற்பட்ட வாசகர்கள், படிப்பு செலவிற்கு தேவையான பணம், கட்டணம் செலுத்த வேண்டிய தேதி போன்ற விவரங்களைக் கேட்டு, உதவிட முன்வந்துள்ளனர். இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியாது என்ற கவலையில் இருந்த சூர்யா, தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.

இச்செய்தியை, படித்த கோபால்சாமி எம்.எல்.ஏ., ராஜபாளையம் வந்தார். சூர்யா வீட்டிற்குச் சென்ற அவர், 20 ஆயிரம் ரூபாயை கல்விக் கட்டண உதவியாக வழங்கினார்.

கோபால்சாமி கூறுகையில், "எம்.எல்.ஏ., கூட்டத்தில் சென்னையில் இருந்தேன். தினமலர் இதழில் செய்தியைப் பார்த்தேன். முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 20 ஆயிரம் ரூபாய் வழங்கினேன். நாளை கடைசி தேதி என்பதால், நேரில் கொடுக்க வந்தேன். படிப்பிற்காக தேவைப்படும் உதவிகள் செய்யப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us