தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் புத்தகங்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு

சமச்சீர் புத்தகங்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு

சமச்சீர் புத்தகங்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு


UPDATED : ஆக 05, 2011 12:00 AM

ADDED : ஆக 05, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2011 12:00 AM ADDED : ஆக 05, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். செளஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற 6ஆம் நாள் விசாரணையில் அரசு சார்பில் வாதாடிய பி.பி. ராவ், தமிழக அரசு திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிரானவர்கள் அல்ல. சமச்சீர் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைப்பட எழுதிய புறநானூற்று வரிகள் இடம்பெற்றுள்ளன. கருணாநிதியின் சரிந்த புகழை நிலைநாட்ட சமச்சீர் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டோ அல்லது வரும் ஆண்டுகளிலோ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் தனியார் பள்ளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன், பெற்றோர்கள் தரப்பில் வாதாடிய அந்தி அர்ஜுனா ஆகியோர் தங்கள் தரப்பு வாதத்தையும் முன் வைத்தனர்.

விசாரணை முடிந்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், சமச்சீர் கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கான தேதியை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.  இரு தரப்பினருக்கும் ஆட்சேபனைகள் இருந்தால் அதை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us