தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வினாத்தாள் அவுட்?

இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வினாத்தாள் அவுட்?

இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வினாத்தாள் அவுட்?


UPDATED : ஆக 07, 2011 12:00 AM

ADDED : ஆக 07, 2011 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2011 12:00 AM ADDED : ஆக 07, 2011 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை

: மதுரையில், ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி பதவிக்கான தேர்வில், வினாத்தாள் &'அவுட்&' ஆனதாக பரபரப்பு எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இத்துறைக்கு, 9 உதவி கமிஷனர்களை நியமனம் செய்ய சென்னை, கோவை, மதுரையில் தேர்வு நடந்தது.

இதில்

, சட்டப் பட்டதாரிகள் பங்கேற்றனர். மதுரையில் மீனாட்சி கல்லூரி மையத்தில், தேர்வாளர்களுக்கு அறை எண் 15ல் வினாத்தாள் வழங்கினர். முன்னதாக, இரண்டு பேரிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. அப்போது, இரண்டு வினாத்தாள்கள் லேசாக சேதமடைந்து இருந்துள்ளன. அறையில் இருந்தவர்கள், வினாத்தாள், &'அவுட்&' ஆகிவிட்டது எனக் கூறி, தேர்வு எழுத மறுத்தனர்.

அவர்கள்

கூறுகையில், &'எங்களை வெளியே செல்ல விடாமல், போலீஸ் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கச் செய்தனர். தேர்வு நேரம் முடிந்த பின் வெளியேற்றினர். தேர்வறை கண்காணிப்பாளர்களும் வினாத்தாள் சேதமடைந்ததாக எழுதிக் கொடுத்துள்ளனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும்&' என்றனர். வினாத்தாள் அவுட் ஆனதா? என, டி.ஆர்.ஓ., முருகேஷ் விசாரணை நடத்தினார்.

அவர்

கூறியதாவது, &'வினாத்தாள் கவர் சீல் வைத்து இருந்தது. அதில் சேதம் இல்லை. வேறு மாநிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டுகளை வாகனங்களில் கொண்டு வருகையில் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. தேர்வாளர்கள் தேர்வை எழுதி விட்டனர்&' என்றார்.

டி

.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, &'வினாத்தாள் குறித்து டி.ஆர்.ஓ., விசாரித்து தகவல் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us