தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடன் இருக்க வேண்டும்

பாடங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடன் இருக்க வேண்டும்

பாடங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடன் இருக்க வேண்டும்


UPDATED : ஆக 24, 2011 12:00 AM

ADDED : ஆக 24, 2011 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2011 12:00 AM ADDED : ஆக 24, 2011 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளில் நடத்தும் பாடங்கள் அனைத்தும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி நடத்தப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை எப்படி பாடம் நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில் தற்போது தான் பள்ளிகளில் சமச்சீர் கல்வி புத்தகம் வந்த பிறகு பாடங்கள் நடத்தும் பணி துவங்கியுள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பிற்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்வி முறைகளில் சமச்சீர் கல்வி அடிப்படையில் பாடங்கள் நடத்த ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை எந்த முறையில் பாடங்கள் நடத்த வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த புதிய உத்தரவு ந.க.எண் 0964/ஏ2/எஸ்எஸ்ஏ/2011ல் கூறப்பட்டிருப்பதாவது; சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை கொண்டு செயல்வழிக்கற்றல் (ஏபிஎல்), எளிய படைப்பாற்றல் கல்வி (எஸ்ஏஎல்எம்) மற்றும் படைப்பாற்றல் கல்வி (ஏஎல்எம்) முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியை பணிமனையாக மாற்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குறுவள மைய பயிற்சியில் புதிய பாட புத்தகத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்து கொள்வதற்கான திட்டமிடல், கலந்துரையாடல், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் மாதிரி பாடத்திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய கலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி வகுப்பறை செயல்பாடுகள் அனைத்தும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி நடத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us