UPDATED : ஆக 24, 2011 12:00 AM
ADDED : ஆக 24, 2011 11:59 AM
அ நிறம் | அளவு
பிளஸ் 2 முடித்த பின், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கு தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டியிருக்கிறது. தேசிய அளவில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள Scholar Aptitude Test (SAT) தேர்வை போல இந்தியாவிலும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் (NAT) என்ற பொது நுழைவுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. 2013ம் ஆண்டுக்குள் இதனை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
