தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்த இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

படித்த இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

படித்த இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்


UPDATED : ஆக 30, 2011 12:00 AM

ADDED : ஆக 30, 2011 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2011 12:00 AM ADDED : ஆக 30, 2011 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான தனியார் துறையில் பணி அமர்த்தும் உதவித் திட்ட துவக்க விழா நேற்று வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடந்தது.

சென்னை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்க திட்ட இயக்குநர் கதிர்வேலு வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் மிஷ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது; தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி இல்லாததால் அதன் பயன் இல்லாமல் இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல தனியார் நிறுவனத்தின் மூலமே இத்தகைய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இதனை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் பேசியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு லட்சம் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் முடிய 65 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவுடன் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அரசால் எல்லோருக்கும் வேலையும் வழங்க முடியாது. இதனால் படித்தவர்கள் தங்களுக்குள் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

இதற்காக அரசு தற்போது பெரிய நிறுவனங்கள் மூலம் படித்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us