தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க பொருளாதார நிலை: பொறியியல் கல்லூரிகள் அச்சம்

அமெரிக்க பொருளாதார நிலை: பொறியியல் கல்லூரிகள் அச்சம்

அமெரிக்க பொருளாதார நிலை: பொறியியல் கல்லூரிகள் அச்சம்


UPDATED : செப் 09, 2011 12:00 AM

ADDED : செப் 09, 2011 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2011 12:00 AM ADDED : செப் 09, 2011 01:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு(NASSCOM), பொறியியல் மாணவர்களை வளாகத்தேர்வில் தேர்வுசெய்ய நிறுவனங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் கடன்பெறும் திறன் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, மென்பொருள் நிறுவனங்களிடையே உதறலை ஏற்படுத்தியுள்ளதால், பொறியியல் கல்லூரிகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை.

இதுகுறித்து ஒரு கல்வியாளர் கூறுகையில், "அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தற்போது நிலைமை ஓரளவு நன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நிறுவனங்கள் மாணவர்களை பணியமர்த்தினாலும், கடந்த 2008ல் ஏற்பட்ட பாதிப்பு இப்போதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கவலையின் அளவு அதிகமாவே இருக்கிறது. பிறகு வருந்துவதைவிட,  முன்னெச்சரிக்கையாக இப்போதே திட்டமிடுவது நல்லது&'&' என்றார்.

மற்றொரு தரப்பினரோ, "இது தற்காலிகமானதுதான். கடந்த 2008ம் ஆண்டை விட, இந்தியாவும் அமெரிக்காவும் இப்பிரச்னையை மிக நன்றாக எதிர்கொள்ள ஆயத்தமாகவே இருக்கின்றன&' என்கின்றனர்.

இன்னொரு கல்வியாளர் கூறுகையில் கூறுகையில், "அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போதெல்லாம், அதனைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆனால், இதை சாதகமான கோணத்திலும் அணுக முடியும். செலவினங்களைக் குறைக்க நினைக்கும் அமெரிக்க நிறுவனங்கள், பணிகளை அவுட்சோர்சிங் வாய்ப்பாக இந்திய நிறுவனங்களுக்கு அளிக்க முன்வரும்,&'&' என, நம்பிக்கை தெரிவித்தார்.

NASSCOM அமைப்பு அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், வளாகத்தேர்வில் அதிக எண்ணிக்கையிலான ஆட்களை தேர்வு செய்வதில் கவனத்துடன் செயல்பட, நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பணி அனுபவம் மிக்கவர்களைத் தேர்வுசெய்து, அதிக ஊதியம் கொடுப்பதை விட, செலவினங்களைக் குறைக்கும் வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதையே நிறுவனங்களும் தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது. பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளூர் சந்தையில் வலுவாக இருக்கின்றன.

இன்னொரு கல்வியாளர் கூறுகையில், "வேலைவாய்ப்பில் தேக்கநிலை எதுவுமில்லை. இது தற்காலிகமானதுதான்; நீண்டகாலப் பாதிப்பு அல்ல. வேலைவாய்ப்பு என்பது எதிர்பார்க்கப்படும் புராஜக்ட்கள், தகுதியான பணியாளர்களைப் பொருத்ததே. எந்த நிறுவனமும் புராஜக்ட்களை இதுவரை திரும்பப்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 2008ம் ஆண்டின் பாதிப்பில் இருந்து மீள்கிற காலகட்டமாக இது இருக்கிறது. தலைசிறந்த 20 பி-ஸ்கூல்களில் மாணவர்கள் 100 சதவீதம் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஆனால், சம்பளம் போன்றளவில் பெரிய மாற்றங்கள் இல்லை. வரும் 2012, 2013ம் ஆண்டுகளில் மிக அதிகளவு பேர் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு விகிதம் 20 சதவீதம் அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்,&'&' என்றார்.

பி-ஸ்கூல்களின் கருத்துப்படி, அமெரிக்காவில் நிலவும் சூழ்நிலை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us