தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிக்கிம் மணிபால் பல்கலையில் மருத்துவ எம்.எஸ்சி., கவுன்சிலிங்

சிக்கிம் மணிபால் பல்கலையில் மருத்துவ எம்.எஸ்சி., கவுன்சிலிங்

சிக்கிம் மணிபால் பல்கலையில் மருத்துவ எம்.எஸ்சி., கவுன்சிலிங்


UPDATED : செப் 16, 2011 12:00 AM

ADDED : செப் 16, 2011 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2011 12:00 AM ADDED : செப் 16, 2011 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் எம்.எஸ்சி., நுண்ணுயிரியல்(Microbiology), உடற்கூறியல்(Anatomy), உயிரி வேதியியல்(Biochemistry), மருத்துவம் (Physiology) பயில விரும்புவர்களுக்கு, சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 20ம் தேதி கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை, பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

இப்பாடப்பிரிவுகளில் சேர, உடற்கூறியல், விலங்கியல், தாவரவியல், நுண்ணுயிரியல், வேதியியல் பாடங்களில் இளநிலை அறிவியல்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள், இளநிலைப்பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிறப்புச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆறு, இடப்பெயர்வுச் சான்றிதழ், இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் சராசரியில் விலக்குக் கோருபவர்கள் தங்களுடைய சாதிச்சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

மேற்கூறிய ஆவணங்களுடன்,  Gangtokல் செலுத்தத்தக்க வகையிலான Sikkim Manipal Institute of Medical Sciences என்ற பெயரில் எடுக்கப்பட்ட 77 ஆயிரத்து 50 ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன் நேரில் வர வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://www.smu.edu.in/notice_view.php?t=p&news=141 என்ற இணைப்பைச் சொடுக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us