தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை: சிபல் வருத்தம்

கல்வி மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை: சிபல் வருத்தம்

கல்வி மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை: சிபல் வருத்தம்


UPDATED : செப் 16, 2011 12:00 AM

ADDED : செப் 16, 2011 03:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2011 12:00 AM ADDED : செப் 16, 2011 03:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அவர் கூறியதாவது, "என்.ஐ.டி. மற்றும் காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி டி&எம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவது உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்களை, எதிர்க்கட்சிகள் செய்யும் ரகளையால் நிறைவேற்ற இயலவில்லை.

கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தையே எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன. கல்வியில் உள்ள அரசியலால், மாணவர்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாததால், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதை உறுதிசெய்ய, ஒரு சட்டம் கொண்டுவருவதற்கு மனிதவள அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

நாம் எவ்வளவோ செய்ய நினைத்தாலும், அரசியல் நிலைமை அதை அனுமதிப்பதில்லை. தேசிய நலன் குறித்து ஒருமித்த எண்ணம் இருப்பதில்லை. எதிர்க்கட்சிகள் காமன்வெல்த் புகார்கள் மற்றும் இன்னபிற விஷயங்களை வைத்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க நினைக்கின்றனவே ஒழிய, ஆளுங்கட்சியை அவர்கள் பேசக்கூட அனுமதிப்பதில்லை.

இதேநிலையில் ஒரு நாட்டின் நிர்வாகம் எப்படி செயல்பட முடியும்? எனவே நாம் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்" என்று பேசினார்.

மேலும், படித்தவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்த அமைச்சர் , அப்படிப் பார்த்தால், கல்வியைப் பெற முடியாத நிலையிலிருக்கும் சமூகத்தவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துவிடுவர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us