தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழி மாணவர்கள் மலையாளம் படிக்க தேவையில்லை

தமிழ் வழி மாணவர்கள் மலையாளம் படிக்க தேவையில்லை

தமிழ் வழி மாணவர்கள் மலையாளம் படிக்க தேவையில்லை


UPDATED : செப் 27, 2011 12:00 AM

ADDED : செப் 27, 2011 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2011 12:00 AM ADDED : செப் 27, 2011 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கேரள அரசு பள்ளிகளில் படிக்கும் தமிழ் குழந்தைகள், கூடுதலாக மலையாள மொழி படிக்க வேண்டிய அவசியமில்லை என்று, திருத்திய அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கேரள மாவட்டங்களான பாலக்காடு, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, வயநாடு, இடுக்கி, திருச்சூர், கொல்லம் ஆகியவற்றில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களது குழந்தைகள் படிக்க வசதியாக, அங்கு தமிழ் மீடியம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதேபோல, கர்நாடகாவை ஒட்டிய பகுதிகளில் கன்னட மீடியம் பள்ளிகளும் உள்ளன. தமிழ் மற்றும் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட, மொழி சிறுபான்மை மாணவர்கள், மும்மொழிக் கொள்கை அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்டனர். தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளை அவர்கள் கற்று வந்தனர்.

இந்நிலையில், மொழி சிறுபான்மை மாணவர்கள், மலையாள மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன், கேரள அரசு ஆணை பிறப்பித்தது. இதன் மூலம், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், மூன்று மொழி மட்டுமே கற்க வேண்டும்; மலையாளத்தை தாய்மொழியாகக் கொள்ளாத பிற மாணவர்கள், நான்கு மொழிகளை கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரிக்கும் நிலையும், அதன் மூலம் கல்வியில் இடைநிற்றல் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால், கேரள அரசின் உத்தரவுக்கு, தமிழர்கள், கன்னடர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; மலையாளம் படிக்குமாறு வற்புறுத்தக் கூடாது என்று கோரி, கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில், அதன் பொதுச் செயலர் பேச்சிமுத்து, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்டோர், அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து, மனு கொடுத்தனர்.

இதேபோல, கர்நாடக அரசும், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களின் நலன் கருதி, அரசாணையை ரத்து செய்யும்படி கேரள அரசிடம் கோரிக்கை வைத்தது. கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு, கட்டாயம் மலையாளம் படிக்க வேண்டும் என்ற அரசாணையில் சில திருத்தங்கள் செய்து, புதிய ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், இது நாள் வரை கல்வி கற்று வந்தது போலவே, இனியும் கல்வி கற்கலாம். தமிழ், கன்னட வழி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழி ஆசிரியர்கள் பணிக்காலம் குறையாததால், வேலை இழக்கும் அச்சம் இல்லை. மொழி சிறுபான்மையினரான தமிழ் மாணவர்கள் உட்பட அனைவரும் மலையாளம் கற்பதற்கு தேவையான வசதிகள் பள்ளியில் செய்து தரப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்று, உரிய ஆணை பிறப்பித்த மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கு, கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us