தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர் மன்மோகன் சிங் உதவித் தொகை அறிவிப்பு

டாக்டர் மன்மோகன் சிங் உதவித் தொகை அறிவிப்பு

டாக்டர் மன்மோகன் சிங் உதவித் தொகை அறிவிப்பு


UPDATED : செப் 28, 2011 12:00 AM

ADDED : செப் 30, 2011 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2011 12:00 AM ADDED : செப் 30, 2011 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேம்பிரிட்ஜ் பல்கலையின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி அளிக்கும் இந்த கல்வியாண்டுக்கான டாக்டர் மன்மோகன் சிங் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் அறிவியல், டெக்னாலஜி, பொருளாதாரம், சமூக அறிவியில் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களை தேர்வு செய்து இந்த பெருமை மிகு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதனைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரம் ஷஷி ரத்னாகர் சிங் டிஇஆர்ஐ ஆராய்ச்சி மாணவர், அவிஷேக் ரஞ்சன் ஐஐடி சென்னையில் முதுநிலை முடித்தவர், அர்ஜுன் தத்தா ஐஐடி ரூர்கியில் எம்.டெக் முடித்தவர், சோஹினி வஞ்சாரி புனே பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும், கடந்த வாரம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலை வாயிலாக இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை ஒளியூட்டும் வகையில் உதவித் தொகை வழங்கும் கொடையாளர்களுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள் சார்பாகவும், கேம்பிரிட்ஜ் பல்கலை சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us