தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் ஆசிரியர்கள் கணினி அறிவை வளர்க்க வேண்டும்

தமிழ் ஆசிரியர்கள் கணினி அறிவை வளர்க்க வேண்டும்

தமிழ் ஆசிரியர்கள் கணினி அறிவை வளர்க்க வேண்டும்


UPDATED : அக் 01, 2011 12:00 AM

ADDED : அக் 01, 2011 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2011 12:00 AM ADDED : அக் 01, 2011 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழை உலகறியச் செய்ய வேண்டும் என்றால், தமிழ் ஆசிரியர்கள் கணினி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மீனா கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாக கல்வி பணியாளர் சார்பில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தமிழ் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி கடந்த 21 நாட்கள் நடைபெற்றது. பயிற்சியின் நிறைவு விழா பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய துணைவேந்தர் மீனா, இதுபோன்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். பிற மொழியில் கல்வி கற்பதை விட தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது. அதுவும் நம்முடைய தாய்மொழியான தமிழில் கற்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆசிரியர்கள் தமிழில் கணினி பயிற்சி பெற வேண்டும். தற்போது கணினியின் தேவை உலகம் முழுவதும் தேவைப்படுகிறது. கணினியின் மூலம் தமிழை உலக அளவில் கொண்டு சேர்க்கலாம். கணினியில் தமிழ் மொன்பொருள், கோப்புகள் உருவாக்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தமிழில் கணினி படித்தவர்களுக்கு தமிழ் மென்பொருள், கோப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ் ஆசிரியர்கள் கணினி அறிவை பெற்று தமிழை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு உரிய பயிற்சியும், முயற்சியும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us