தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வசதிகளின்றி அவதிப்படும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்

வசதிகளின்றி அவதிப்படும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்

வசதிகளின்றி அவதிப்படும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்


UPDATED : அக் 12, 2011 12:00 AM

ADDED : அக் 12, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2011 12:00 AM ADDED : அக் 12, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் : தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், போதிய அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் கோவிந்தவாடி கிராமம் உள்ளது. இங்கு, 1971ம் ஆண்டு, எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி துவக்கப்பட்டது.

பின், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில், கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது. 2009ம் ஆண்டு, இப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, 325 மாணவியர் உட்பட, 525 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.தலைமை ஆசிரியர், நான்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், எட்டு இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

தரம் உயர்த்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், போதிய வகுப்பறைகள் இல்லாததால், பள்ளி மைதானத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளியில், இரண்டு அறைகளுடன் உள்ள கழிப்பறையை, ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். மாணவ, மாணவியருக்கு தனியாக கழிப்பறை இல்லாததால், அவர்கள், இயற்கை உபாதைக்காக, பள்ளி அருகில் உள்ள தோப்புக்குள் செல்கின்றனர்.

பள்ளியின் ஒரு புறம் மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது. இதனால், கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் சுற்றித்திரிகின்றன."பள்ளி நீர்நிலைப் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதால், தேவையான வசதிகளை செயல்படுத்த முடியவில்லை. பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு பட்டா இல்லாததால், நபார்டு திட்டம், பள்ளி விரிவாக்க திட்டம் போன்றவற்றிற்கு நிதியுதவி பெற முடியவில்லை" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, பள்ளிக் கல்விக் குழு உறுப்பினர் கூறும்போது, "தற்போது பள்ளி உள்ள இடம் குளம் புறம்போக்கு என்பதால், பள்ளிக்கு,வேறு இடத்தை தேர்வு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்புகள், ஆர்.டி.ஓ., க்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.

இதேபோல், புள்ளலூர் அரசு உயர்நிலைப் பள்ளியும், 2009ம் ஆண்டுமேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 350 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், எட்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. குடிநீர் வசதியும், ஆய்வக வசதிகளும் இல்லை. இதனால், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. செய்முறை தேர்வின் போது மட்டும், வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் அருண்பிரசாத் கூறும்போது, "தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், படிப்படியாகத் தான் வசதிகள் மேம்படுத்தப்படும். இருப்பினும், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us