தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் முகாம்


UPDATED : அக் 14, 2011 12:00 AM

ADDED : அக் 14, 2011 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2011 12:00 AM ADDED : அக் 14, 2011 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, ஐந்து நாள் சிறப்பு அறிவியல் முகாம், சென்னையில் நேற்று துவங்கியது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில், சென்னைப் பல்கலை நடத்தும் இந்த அறிவியல் முகாம், கோட்டூர்புரத்தில் உள்ள சென்னைப் பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.

பல்கலை துணைவேந்தர் திருவாசகம், அறிவியல் முகாமைத் துவக்கி வைத்துப் பேசியதாவது: மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தீவிர ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான், நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள், ராக்கெட்டில் அனுப்பிய செய்தி வியப்பளிக்கிறது. சென்னைப் பல்கலை போன்று, பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களும், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு, திருவாசகம் பேசினார்.

சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட, ஒன்பது அரசுப் பள்ளிகள் மற்றும் நான்கு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஐந்து நாட்களும் பல்வேறு கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us