தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு கலந்தாய்வு துவக்கம்

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு கலந்தாய்வு துவக்கம்

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு கலந்தாய்வு துவக்கம்


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மருத்துவ முறை படிப்புகளை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கடந்த 13ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் மறு ஒதுக்கீடு பெறவும், அனைத்து சிறப்பு பிரிவு மாணவர்களும், காலையில் இருந்தே சித்த மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ளனர். இன்று பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். 

இந்த கலந்தாய்வில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை நடைபெறும். இந்த கல்லூரிக்கான வகுப்புகள், உயர் நீதின்ற உத்தரவுப்படி, இந்திய மருத்துவ மத்திய கழகம், புதுடெல்லி மற்றும் மத்திய அரசின் ஆஷ் துறையின் அனுமதி கிடைத்த பிறகு துவங்கும்.

கலந்தாய்வு விவரம் :
21ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அனைத்து சிறப்பு பிரிவினரும், பொதுப்பிரிவினரும் தரவரிசை 1 முதல் 202 வரை (கட்ஆப் 197-175.25 வரை) பங்கேற்க வேண்டும்.

22ம் தேதி காலையில் தரவரிசை எண் 203-354 (கட்ஆப் 175-163.50)
பிற்பகலில் தரவரிசை 355-501 (கட்-ஆப் 163.25-154.25)

23ம் தேதி காலையில் தரவரிசை எண் 502-675 (கட்ஆப் 154-143.25)
பிற்பகலில் தரவரிசை 676-861 (கட்-ஆப் 143-130)

24ம் தேதி காலையில் தரவரிசை எண் 862-1001 (கட்ஆப் 129.75-117)
பிற்பகலில் தரவரிசை 1002-1141 (கட்-ஆப் 116.75-82.25)

மாணவர்கள் அவரவருக்குரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதியே இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது. இடையில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் மாணவ சேர்க்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கலந்தாய்வு உடனடியாக நிறுத்தப்பட்டு 21ம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்
தக்கது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us