தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை

உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை

உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை


UPDATED : அக் 28, 2011 12:00 AM

ADDED : அக் 28, 2011 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2011 12:00 AM ADDED : அக் 28, 2011 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இவற்றை செலுத்தாத மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க, மறுத்து வருகின்றன. இந்த வசூல் வேட்டையால், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், ஐந்து உயர்நிலைப் பள்ளிகளும், 18 மேல்நிலைப் பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இதில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம் முதல், மாணவ, மாணவியருக்கு தேவையான புத்தகங்கள், இலவச சைக்கிள், பஸ் பாஸ், சத்துணவு ஆகியவற்றை, அரசே வழங்குகிறது.

இதனால், அரசு பள்ளிகளில் வாங்கப்படும் கட்டணம் அளவுக்கு மட்டுமே இதிலும் பெறப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அரசு பள்ளிகளில் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை, தமிழக அரசு ரத்து செய்து விட்டது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர், எவ்வித கட்டணமும் இன்றி, தங்கள் படிப்பை தொடர முடியும். ஆனால், பெரும்பாலான நிதியுதவி பெறும் பள்ளிகள், தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு, கட்டணங்களை வசூல் செய்து வருகின்றன. தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடமே, ஓர் ஆண்டுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

பொதுவாக, நன்கொடை வசூல் குறித்து, மாணவர் சேர்க்கையின் போது புகார் எழும்பும். அந்த சமயங்களில் புகார் எழுந்தால், பள்ளியின் நற்பெயர் கெடும் என்பதால், அப்போது குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு, மாணவர் சேர்க்கை நடத்தி விடுகின்றனர். பள்ளி துவங்கி இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், மீண்டும் கட்டணத்தை செலுத்த மாணவ, மாணவியரை வற்புறுத்த துவங்கி விடுகின்றன. மாவட்ட கல்வி நிர்வாகமும், உதவி பெறும் பள்ளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறியதாவது: சேலம் மாநகர பகுதிகளில், அதிக உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில், உதவி பெறும் பள்ளிகள் இருக்கும் பட்சத்தில், அங்கு அரசு பள்ளி துவங்குவதில்லை. உதாரணமாக, நெத்திமேடு, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும், உதவி பெறுபவையாகவே உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள், அரசு பள்ளிகளில் சேர வேண்டுமெனில், நான்கு கிலோ மீட்டர் தூரமாவது, பயணிக்க வேண்டியிருக்கும். அப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவியர், உதவி பெறும் பள்ளிகளிலேயே படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்ட பள்ளி நிர்வாகமும், ஆயிரக்கணக்கில் கட்டணம், நன்கொடை என கட்டாயப்படுத்துகிறது.

மாணவர்களை சேர்க்கும் போது, குறைந்த அளவு கட்டணத்தில் சேர்த்து விடுகின்றனர். பின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி, மாணவர்களை தேர்வெழுதவோ, பள்ளி வகுப்பறைக்கு செல்லவோ, அனுமதிப்பதில்லை. சைக்கிள் உள்ளிட்ட சலுகைகளும், அனைத்து கட்டணங்களும் கட்டிய பின்பே வழங்கப்படுகின்றன.

மேலும், முழு ஆண்டு தேர்வின் போதும், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்குவதில்லை. மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும், எவ்வித பயனும் இல்லை. இதனால், பள்ளி நிர்வாகத்தினர் நாளுக்கு நாள் வசூல் வேட்டையை அதிகரித்து வருகின்றனர். பல மாணவ, மாணவியர் படிப்பை பாதியில் கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, உதவி பெறும் பள்ளிகளின் வசூல் வேட்டையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அப்பகுதிகளில் அரசு பள்ளிகள் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us