தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய புவிஅமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு

தேசிய புவிஅமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு

தேசிய புவிஅமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு


UPDATED : அக் 29, 2011 12:00 AM

ADDED : அக் 29, 2011 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2011 12:00 AM ADDED : அக் 29, 2011 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

National Geophysical Research Institute - NGRI எனப்படும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

புவி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம்(முதல் வகுப்பில்) பெற்று, CSRI-UGC நடத்தும் NET தேர்விலும் தேர்ச்சிப் பெற்ற ஒருவர், இந்நிறுவனத்தின் பிஎச்.டி. ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம். DST INSPIRE உள்ளிட்ட ஏஜென்சிகளில் உதவித்தொகை பெற்று வருபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். CSIR ஆய்வகங்களில் பணிபுரியும் ப்ராஜெக்ட் உதவியாளர்கள், குறைந்தபட்சம் 1 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை, csir-phd.csio.res.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் அனுப்ப வேண்டும். CSIR ஆய்வகங்களில் திட்ட உதவியாளர்களாக பணிபுரிபவர்கள், தங்களுடைய ஆராய்ச்சி நோக்கங்கள் மற்றும் திட்ட தலைவரின் பரிந்துரைகள் போன்றவைகளை Dr R.K. Tiwari, Coordinator-AcSIR, (CSIR-NGRI) Email: tiwari_rk@ngri.res.in, acsir@ngri.res.in Tel.040-23434648, 23434624 Fax 040-23434651 என்பவருக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வடிகட்டப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், நேர்காணல் மூலமாக இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு சென்று வருவதற்கான பயணப்படி மற்றும் தினப்படி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், ஜியோபிசிக்ஸ், ஜியாலஜி, ஜியோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியோக்ரோனாலஜி(Geochronology) உள்ளிட்ட பல துறைகளை சார்ந்ததாக இருக்கலாம்.

இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15.

இந்நிறுவனம் வழங்கும் பிஎச்.டி. ஆய்வைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.ngri.org.in என்ற இணையதளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us