தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெட் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்

நெட் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்

நெட் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்


UPDATED : அக் 31, 2011 12:00 AM

ADDED : அக் 31, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2011 12:00 AM ADDED : அக் 31, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யு.ஜி.சி., ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் என இருமுறை கல்லூரி விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் ஆராய்ச்சியாளர்களுக்கு, தேசிய அளவில் நெட் தேர்வை நடத்தி வருகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக சேர தகுதியுடையவர்களாவர்.

இந்த ஆண்டு டிச., 24ல் தேர்வு நடக்கிறது. இதற்கு ஆன்லைன்ல் விண்ணப்பிக்க செப்.,26 முதல் அக்., 25ம் தேதி வரை, ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்க அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில் சமர்ப்பிக்க நவம்பர் 8ம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் முதல் வாரம் யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை யு.ஜி.சி., இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us