தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வங்கி தேர்வாளர்களுக்கு பயிற்சி

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வங்கி தேர்வாளர்களுக்கு பயிற்சி

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வங்கி தேர்வாளர்களுக்கு பயிற்சி


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்கிப் பணியாளர் தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் சிவசண்முகராஜா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை விவரம்: தேசிய மயமாக்கப்பட்ட, 19 வங்கிகளில், எழுத்தர் பணிக்கான தகுதித்தேர்வு, இம்மாதம் இறுதியில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தை, இலவசமாக அலுவலக நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வுக்கு முன்பாக, 15 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us