தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ தேர்வு விதிமுறையை எதிர்த்துப் போராட முடிவு

மருத்துவ தேர்வு விதிமுறையை எதிர்த்துப் போராட முடிவு

மருத்துவ தேர்வு விதிமுறையை எதிர்த்துப் போராட முடிவு


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி, பிசியாலஜி பாடங்களின் தேர்ச்சிக்கு, பகுதி 1, பகுதி 2 ஆகிய இரு பகுதியிலும் சேர்த்து 50 மதிப்பெண் பெற்றால் போதும். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு பகுதியிலும் 50 மதிப்பெண் பெற வேண்டும் என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதனால், கடந்த ஆண்டில் 1,200 பேரும், கடந்த 10 நாளுக்கு முன் வெளியான தேர்வு முடிவில், 1,460 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். இப்புதிய விதிமுறை, இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு மாறாக உள்ளது. பிற மாநிலங்களில் கடைபிடிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் முன்பு இருந்தது போலவே இருக்க வேண்டும் என, மருத்துவ மாணவர்கள் விரும்புகின்றனர். மேலும், நிகர்நிலை பல்கலைகளிலும் இப்புதிய முறை இல்லை. மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இதனால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்காக மருத்துவ மாணவர்கள் ஒரு மணி நேரம் வகுப்பை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவிப்பது எனக் கருதினர். மாநில அளவில் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த பரிசீலனை செய்து வருவதால், பின்னர் கைவிடப்பட்டது.

மருத்துவ மாணவர்கள் கூறுகையில், "இப்புதிய விதிமுறையால் ஏற்படும் மாணவர்களின் பாதிப்பை, பல்கலை கண்டுகொள்ளாமல் உள்ளது. இரு பகுதியிலும் சேர்த்து, 50 மதிப்பெண் பெற்றால் போதும் என பழைய முறையே நீடிக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் கூறுவது போல ஓரல் மதிப்பெண், அகமதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்ணையும் எழுத்துத் தேர்வுடன் சேர்க்க வேண்டும். இது தவிர, மாணவர்களின் தேர்வு விடைத்தாள் நகல் முன்பு தரப்பட்டது. இந்த ஆண்டு தரவில்லை. அதைத் தருவதுடன், மறுமதிப்பீட்டுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us