தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற கலெக்டர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களின் சிறார்களுக்கு தொழிற்கல்வி முதலாம் ஆண்டு 2010-11ம் கல்வியாண்டிற்கு பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து, தேர்வு செய்யப்படாதவர்களுக்ககு வேறு ஆதராங்களில் இருந்து கல்வி உதவித் தொகை அனுமதிக்கப்படாத நிலையில் இதர தகுதிகளின் அடிப்படையில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதன் விபரம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி கல்வி உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படாத தகுதியுடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள முன்னாள் படைவீரர்கள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணபித்த ஒப்புகை கடித்துடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, கல்வி உதவித் தொகை பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலக்த்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us