தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாத நிதியை செலவழிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாத நிதியை செலவழிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாத நிதியை செலவழிக்க உத்தரவு


UPDATED : நவ 05, 2011 12:00 AM

ADDED : நவ 05, 2011 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2011 12:00 AM ADDED : நவ 05, 2011 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை முழுமையாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு நிதியுதவியுடன் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு மானிய தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த ஆண்டு, 25 ஆயிரம் ரூபாய்க்கு அறிவியல் ஆய்வுக்கூட உபகரணங்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு தினசரி மற்றும் வார பத்திரிக்கைகள், மின் கட்டண பராமரிப்புக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மின் கட்டணம் மற்றும் பத்திரிக்கை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையில், பெரும்பாலான பள்ளிகள் முழுமையாக பயன்படுத்தாமல் வைத்துக்கொண்டுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மாநில கூடுதல் திட்ட இயக்குனர் இளங்கோவன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதில் பள்ளி மானிய நிதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையில், குடிநீர் தூய்மைப்படுத்தும் சாதனம் (ஆர்.ஓ.,) மின் சாதன பொருட்கள், கழிவறைகளை சுத்தம் செய்து பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை செய்து, ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

திட்ட முன் செயல்பாடுகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்ட, 3,000 ரூபாய் செலவு செய்யப்படாமலிருந்தது. இத்தொகையில், 1,500 ரூபாயில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் குறிக்கோள் அடங்கிய பெயர் பலகை வைக்கவும், மீதமுள்ள, 1,500 ரூபாயில், பள்ளியின் பெயர் பலகை மற்றும் வாயில் கதவுகள் ஆகியவற்றை தரமான முறையில் வர்ணம் பூசி பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us