தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்க கோரிக்கை

தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்க கோரிக்கை

தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்க கோரிக்கை


UPDATED : நவ 06, 2011 12:00 AM

ADDED : நவ 06, 2011 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2011 12:00 AM ADDED : நவ 06, 2011 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கடந்த ஆட்சியில் வழங்கப்படாத தனி ஊதியத்தை உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: அடிப்படை தர ஊதியம் ரூ.4,800 ஆக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.750 தனி ஊதியமாக அகவிலைப்படியுடன் வழங்கப்படுகிறது. ரூ.5,700 என்ற அடிப்படை தர ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர்களுக்கும் ரூ.500 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

இதன்படி ரூ.5,700 என்ற அடிப்படை தர ஊதியம் பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.900 வழங்க வேண்டும். ஆகவே, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் முன் தேதியிட்டு தனி ஊதியம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத இக்கோரிக்கையை, அ.தி.மு.க., அரசாவது நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, பாலகிருஷ்ணன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us