தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியே வாழ்வின் மந்திரக்கோல் - பிரதமர்

கல்வியே வாழ்வின் மந்திரக்கோல் - பிரதமர்

கல்வியே வாழ்வின் மந்திரக்கோல் - பிரதமர்


UPDATED : நவ 12, 2011 12:00 AM

ADDED : நவ 12, 2011 03:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2011 12:00 AM ADDED : நவ 12, 2011 03:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சந்தித்து வெற்றி பெற கல்விதான் மந்திரக் கோலாகும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தேசிய கல்வி நாள் விழாவை முன்னிட்டு கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு அனுப்பியுள்ள தேசிய கல்வி நாள் விழா வாழ்த்துச் செய்தியில், கல்வி எனக்கு புது வாழ்வை கொடுத்தது. நான் எனது கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றபோது, அங்கு மின் வசதி இல்லை. விளக்கு வெளிச்சத்தில் படித்தேன். பள்ளிக்கு பல மைல் தூரம் நடந்து செல்வேன். என்னால் முடிந்தளவு கஷ்டப்பட்டு படித்தேன். எனது முயற்சிக்கேற்ற பலனை நாடு எனக்கு அளித்தது. அதனால் வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எந்த வித சவால்களையும் சந்திக்க கல்விதான் சிறந்த மந்திரக்கோல் என்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us