தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடன் வழங்க மறுப்பு : பெற்றோர் புகார்

கல்விக்கடன் வழங்க மறுப்பு : பெற்றோர் புகார்

கல்விக்கடன் வழங்க மறுப்பு : பெற்றோர் புகார்


UPDATED : நவ 15, 2011 12:00 AM

ADDED : நவ 15, 2011 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2011 12:00 AM ADDED : நவ 15, 2011 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் : மானாம்பதி இந்தியன் வங்கியில், கல்விக்கடன் வழங்க மறுப்பதாக, மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வி படிக்கின்றனர்.

அவர்களுக்கு கல்விக் கடன் கேட்டு, மானாம்பதி இந்தியன் வங்கி கிளை மேலாளரை அணுகினோம். அவர் வழங்க மறுத்து விட்டார். அடுத்து காஞ்சிபுரம் தலைமை அலுவலகத்திற்கு சென்று, கல்விக்கடன் விண்ணப்பப் படிவம் வாங்கி, பூர்த்தி செய்து மானாம்பதி வங்கியில் கொடுக்கச் சென்றோம்.

வங்கி மேலாளர், அவற்றை வாங்க மறுத்து விட்டார். "நான் கொடுத்த மனுவாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன். மனுவை எங்கு வாங்கினீர்களோ, அங்கேயே கொடுங்கள்" எனக் கூறிவிட்டார்.

ஏற்கனவே காலம் கடந்துவிட்டதால், உரிய நடவடிக்கை எடுத்து, சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us