தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாசா மையத்தில் மேட்டுப்பாளையம் மாணவர்கள் பயிற்சி

நாசா மையத்தில் மேட்டுப்பாளையம் மாணவர்கள் பயிற்சி

நாசா மையத்தில் மேட்டுப்பாளையம் மாணவர்கள் பயிற்சி


UPDATED : நவ 15, 2011 12:00 AM

ADDED : நவ 15, 2011 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2011 12:00 AM ADDED : நவ 15, 2011 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் : நாசா விண்வெளி ஆய்வு மையத்தில், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், எஸ்.எஸ்.வி.எம்., ஆகிய பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு செயல்முறை பயிற்சிகளை பெற்றனர்.

மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 34 மாணவ, மாணவியர் வட அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளமான ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

இங்கு முக்கியமான 39பி ஏவுதளத்தையும், ராக்கெட் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விண்ணில் ஏவப்பட்ட விண்கலங்களின் மாதிரிகளையும் பார்த்து அதன் விபரங்களையும் கேட்டறிந்தனர். ராக்கெட் செலுத்தக்கூடிய 525 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கட்டடத்தை பார்த்து அதன் செயல் விபரங்களையும் அறிந்தனர்.

டிவியில் சில வினாடிகள் மட்டுமே கண்டு ரசிக்கக்கூடிய கவுண்ட் டவுன் நிகழ்வு, ராக்கெட்டை விண்ணில் ஏவுதல், பயண அதிர்வு மற்றும் விண்ணில் இறங்கும் நிகழ்வுகளை அனுபவித்து உணரும் வகையில் செயல்விளக்கம் ஆகியவை 3டி அனிமேஷன் படங்கள் மூலம் விளக்கப்பட்டன.

அமெரிக்காவின் விண்வெளி வீரரான ஜான் ஓ கிரெய்ட்டனுடன் மாணவர்கள், விண்வெளி பயணத்தின் அனுபவங்களை பற்றி கலந்துரையாடினர். விண்கலங்கள் தயாரிப்பது மற்றும் ஏவுவதற்கான தொழில்நுட்பங்களையும், தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நாசா விஞ்ஞானிகள் பல்வேறு செயல்முறை பயிற்சி அளித்தனர்.

காகிதத்தால் ராக்கெட் செய்து, அதை மாணவர்களே ஏவி இலக்கை அடையச் செய்யும் பயிற்சி அளித்தனர். அப்பல்லோ 18ஐ தயாரித்து விண்ணிற்கு அனுப்பப்படாமல் இருக்கும் விண்கலத்தின் அருகில் சென்று அதன் விபரங்களைச் சேகரித்தனர். அப்பல்லோ ஒன்று முதல் 17 வரையிலான அனைத்து விண்கலன்களைப் பற்றிய தகவல்களை விஞ்ஞானிகள் விளக்கினர்.

24 முதல் 36 அங்குலம் வரையிலான அளவு கொண்ட மாதிரி பாலம் தயாரித்தல் போன்ற போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுலா ஏற்பாடுகள் குறித்து பள்ளி தாளாளர் மணிமேகலை, செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் கூறுகையில், "பாடத்தில் மட்டுமே படித்து வந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி ஏவுதளத்தை, நேரில் பார்த்து அதன் பயன்களை அறிந்தது, மனதில் நன்கு பதிந்திருக்கும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட இப்பயணம் ஒரு தூண்டு கோலாகவும் அமைந்திருக்கும். இந்த மூன்று நாள் கல்விச் சுற்றுலாவில் விண்வெளி வீரர்களின் புகழிடத்துக்குச் சென்று அவர்களுடன் உரையாடி, பயண விவரங்கள், அவர்களின் சாதனைகளை தெரிந்து கொள்ள முடிந்தது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us