UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இது குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி., மாணவர் பிரிவு டீன் பேராசிரியர் வி.ஜி. இடிச்சாண்டி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோச்சிங் மையங்களால் ஐ.ஐ.டி., அட்மிஷன் நடைமுறை பாதிக்கப்படுகிறது. முடிவு எடுக்கும் நிலையில் நான் இருந்தால், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வையே ஒழித்துவிடுவேன் என்று பேராசிரியர் இடிச்சாண்டி தெரிவித்தார்.
பள்ளிகளில் பாடங்களிலும் விளையாட்டு போன்ற பாடங்கள் அல்லாத இதர துறைகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அட்மிஷன் நடைமுறை இருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு முறை தொடர வேண்டுமானால், பள்ளி நிலையில் உயர்நிலையில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நுழைவுத் தேர்வு எழுதச் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நடைமுறையில் மாணவிகளுக்கோ அல்லது கிராமப்புற மாணவர்களுக்கோ பி.டெக்., படிப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. ஐ.ஐ.டி.,களில் சேரும் மாணவர்களில் 8 சதவீதம் பேரே மாணவிகள். குறைந்தது 30 சதவீத மாணவிகளாவது ஐ.ஐ.டி.களில் இடம் பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றார்.
பேராசிரியர் இடிச்சாண்டி தலைமையில் அமைக்கப்பட்டுள்ல நிபுணர் குழு, அடுத்த ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், 2010ம் ஆண்டில் அட்மிஷன் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
