தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., படிச்சாலும் ‘எக்கச்சக்க சம்பளம்’ எதிர்பார்க்க முடியாது

எம்.பி.ஏ., படிச்சாலும் ‘எக்கச்சக்க சம்பளம்’ எதிர்பார்க்க முடியாது

எம்.பி.ஏ., படிச்சாலும் ‘எக்கச்சக்க சம்பளம்’ எதிர்பார்க்க முடியாது


UPDATED : அக் 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் ஆரம்பித்த நிதி நெருக்கடி சூறாவளி இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கியுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பிசினஸ் அடிபட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்க பி.இ., படித்தால் போதும் என்ற கற்பனையில் பலரும் இருந்தனர். ஆனால், ஆங்கிலம் பேசும் புலமை பெற்றுள்ள முன்னணி கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தான் அதிக அளவில் வேலைவாயப்பு கிடைத்து வருகிறது.
முதல்நிலையில் உள்ள கல்லூரிகள் தவிர, இரண்டாம், மூன்றாம் தர கல்லூரிகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தர நிறுவனங்கள் போவதே இல்லை; அப்படியே போனாலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கடிதத்தை தந்துவிட்டு இழுத்தடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலை இப்போது எம்.பி.ஏ., படித்த மாணவர்களுக்கும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், மேலாண்மை கல்வியில் சிறந்த ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படித்த மாணவர்களுக்குப் பல லட்சம் ஆண்டு சம்பளம் அளித்து பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் போக்கு கடந்த சில ஆண்டாக இருந்து வருகிறது.
ஆனால், இப்போதுள்ள சர்வதேச நிதி நெருக்கடியால், பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதல் நிலை கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்., களில் மட்டும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தர திட்டமிட்டுள்ளன.
இதுவரை, ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கூட ஆண்டு சம்பளம் நிர்ணயித்து வேலை தந்தன பன்னாட்டு நிறுவனங்கள்; ஆனால், இந்த முறை பலமடங்கு சம்பளம் குறையும் என்றும் அஞ்சப்படுகிறது.
இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்களுக்கு முன்னணி தகவல் தொழில் நுட்ப, வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருவது சந்தேகம் தான்.
இதுகுறித்து மேலாண்மை கல்வி பேராசிரியர்கள் கூறுகையில், ‘இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பைத் தருபவை பன்னாட்டு தகவல் தொழில்நுட்பம், வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான். ஆனால், அந்த நிறுவனங்களே இந்த முறை வருவது சந்தேகம் என்றால், எம்.பி.ஏ., படித்தும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிகிறது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us