தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த எதிர்ப்பு

சிவில் சர்வீஸ் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த எதிர்ப்பு

சிவில் சர்வீஸ் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த எதிர்ப்பு


UPDATED : அக் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இது தொடர்பான முக்கியத் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டதை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.


தேர்வுகளை ஆன்லைனில் எழுத வகை செய்வது, நேர்காணல் தேர்வுகளை ஒளிப்பதிவு செய்வது, கட் ஆப் மதிப்பெண்ணை வெளியிடுவது போன்ற முக்கியத் திருப்பங்கள் இத்தீர்ப்பில் இருந்தது. இத்தேர்வுகளை நடத்தும் யூ.பி.எஸ்.சி. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரிலிமினரிதேர்வுகளின் தேர்ச்சி அளவிடப்படும் முறையை மாற்ற டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
 
இதனை மறுத்துள்ள யு.பி.எஸ்.சி. இம்முறை பயிற்சி நிறுவனங்களால் தவறாக உபயோகப்படுத்தபட்டுவிடும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது. தற்சமயம் இத்தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
விருப்பப்பாடங்களைத் தேர்வு செய்வதில் விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. எந்தத்துறையில் விருப்பப்பாடமாக தேர்வு எழுதுகிறோமோ அத்துறையில் கட்டாயம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டியது அவசியம் இல்லை. தவிரவும் வேறு வேறு முயற்சிகளில் பாடங்களை மாற்றிக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.
 
பிரிலிமினரி தேர்வுகளில் அக்கறையில்லாதவர்களும் தேர்வு எழுதுவதால், தேர்வு எழுதுபவர்களை அக்கறையுடன் சோதிக்கும் விதத்தில் மட்டுமே இத்தேர்வுகள் நடத்தப்படும். இதனால் இந்த கட்டத்தில் தேர்வு எழுதுபவர்கள் கல்வித்தகுதி குறித்த எவ்வித அத்தாட்சியையும் தரத்தேவையில்லை.

யூ.பி.எஸ்.சி., தேர்வுகள் தொடர்பாக 22 மாணவர்கள் கொடுத்த மனுவின் பேரில் இவ்விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெளிப்படையான தேர்வு முறையைக் கடைபிடிக்குமாறு உயர்நீதிமன்றம் யூ.பி.எஸ்.சியை அறிவுறுத்தியது. இருந்தாலும் இதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க இன்னமும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் யூ.பி.எஸ்.சி., தேர்வுகளைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us