சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவிக்கு ஜெயலலிதா உதவி
சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவிக்கு ஜெயலலிதா உதவி
UPDATED : அக் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
நாமக்கல் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள படைவீடு கிராமத்தைத் சேர்ந்தவர் நந்திதா. இவர் 2007ம் ஆண்டு, கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடந்த 11 வயதுக்குட்பட்ட தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வரும் 19ம் தேதி வியட்நாமில் நடைபெறும் உலக சதுரங்கப் போட்டிக்கு நந்திதா தகுதி பெற்றுள்ளார்.
தனது பயணச் செலவுகளுக்காக உதவி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச் பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
வியட்நாமில் நடைபெறவுள்ள உலக சதுரங்கப் போட்டியில் நந்திதா கலந்து கொள்ள ஏதுவாக, தமது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, பயணச் தொகை 80,000 ரூபாயை வழங்கினார் ஜெயலலிதா.
