தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறையின் இயலாமை: அங்கீகாரத்தை புதுப்பிக்காத நர்சரி பள்ளிகள்

கல்வித்துறையின் இயலாமை: அங்கீகாரத்தை புதுப்பிக்காத நர்சரி பள்ளிகள்

கல்வித்துறையின் இயலாமை: அங்கீகாரத்தை புதுப்பிக்காத நர்சரி பள்ளிகள்


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
கோவை மாவட்டத்தில் ஏராளமான தனியார் நர்சரி பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 413 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளின் அங்கீகாரம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின் தனியார் நர்சரி பள்ளிகளை நடத்துவதற்கென வகுக்கப்பட்ட 41 விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவது இல்லை.
விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உதவி கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி கல்வி அலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களுக்கும் தலா இரண்டு பேர் வீதம், மொத்தம் 44 அலுவலர்கள் உள்ளனர்.
ஏராளமான பள்ளிகள் விதிமுறைகளை மீறி செயல்படும் நிலையில், இப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள உதவி கல்வி அலுவலர்களோ, அலுவலகத்தில் ஓய்வு எடுக்கின்றனர்.
இது குறித்து கல்வித் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஆய்வுக்கு செல்லும் உதவி கல்வி அலுவலர்களை தனியார் பள்ளி நிர்வாகிகள் ‘கவனித்து’ விடுவதால், விதிமுறைகளை மீறும் பள்ளிகள் குறித்த உண்மையான அறிக்கை வெளியாவதில்லை.
இதனால் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுடன் குழுவாக மட்டுமே ஆய்வுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக’ தெரிய வந்தது.
பயிற்சி, மீட்டிங் என கல்வி உயரதிகாரிகள் எப்போதும் மும்முரமாக உள்ளதால் அனைவரும் குழுவாக ஆய்வுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளை கண்டுகொள்ள யாருமில்லை.
ஆய்வுக்கு செல்லாததால் பல பள்ளிகளின் அங்கீகாரம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கூடுதல் வேலைப் பளு காரணமாக புதிய பள்ளிகளின் அங்கீகாரம், புதுப்பித்தல் தொடர்பான ஆவணங்களின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us