தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நிறுவனமாக உயர்த்தப்பட்ட ‘ஜிப்மர்’ நாட்டிற்கு அர்ப்பணிப்பு

தேசிய நிறுவனமாக உயர்த்தப்பட்ட ‘ஜிப்மர்’ நாட்டிற்கு அர்ப்பணிப்பு

தேசிய நிறுவனமாக உயர்த்தப்பட்ட ‘ஜிப்மர்’ நாட்டிற்கு அர்ப்பணிப்பு


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் (ஜவகர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜிப்மரில் உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, 93.4 கோடி ரூபாய் செலவிலும், விபத்துக்கால சிகிச்சைப் பிரிவு 13 கோடி ரூபாய் செலவிலும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு 360 படுக்கை வசதியுடனும், 10 அறுவை சிகிச்ø கூடங்களுடனும் இயங்கும். இங்கு, இதயவியல், நரம்பியல், குடலியல் அறுவை சிகிச்சை, அணு மருத்துவம் உள்ளிட்ட 15 உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படும்.
விபத்துக்கால சிகிச்சைப் பிரிவில் அதிநவீன ஸ்கேன் கருவிகள், விபத்து அறுவை சிகிச்øகான பிரத்யேக கட்டில்கள், நுண்ணிய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை கருவிகள், அறுவை சிகிச்சையின் போதே எலும்பு சேர்க்கை சரியாக உள்ளதா என கண்டறியும் கதிர் வீச்சுக் கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஜிப்மர் வளாகத்தில் அக்., 15ம் தேதி நடக்கும் விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜிப்மரை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவின் வெளிப்புற நோயாளிகள் பகுதி, விபத்துக்கால அவசர மருத்துவ சேவைகள் பகுதி, ஜிப்மர் கலையரங்கம் ஆகியவற்றையும் கலாம் திறந்து வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us