தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மேலும் ஒரு குளறுபடி

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மேலும் ஒரு குளறுபடி

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மேலும் ஒரு குளறுபடி


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், விடுபட்டவர்கள் என்று 100க்கும் மேற்பட்ட பெயர் பட்டியலை வேலை வாய்ப்பு இயக்குனரகம் தற்போது கொடுத்துள்ளது. இதனால், பதிவு மூப்பு பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும்.
பள்ளி கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக 7,500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் அழைத்து, அவர்களுடைய சான்றிதழ்களும் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளன.
பதிவு மூப்பில் முதலில் உள்ளவர் தேர்வு பெறாத சூழ்நிலை எழுந்தால், இரண்டாவது நபர் தேர்வு பெறுவார். சான்றிதழ் சரிபார்த்தலில் பங்கேற்றவர்கள், எப்போது இறுதிப் பட்டியல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பி, அது கிடைக்காத காரணத்தால் விடுபட்ட பதிவுதாரர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது.
எல்லாருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்த பிறகே, இறுதி பட்டியல் தயாராகும். அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், விடுபட்டவர்கள் என்று புதிதாக 100க்கும் மேற்பட்டோர் அடங்கிய பெயர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வேலை வாய்ப்பு இயக்குனரகம்  திடீரென்று ஒப்படைத்துள்ளது.
வேலை வாய்ப்பு இயக்குனரகத்தின் இந்த செயலைக் கண்டு தேர்வு வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து இந்தப் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளன. முதலில் பதிவு மூப்பு பட்டியலை தயார் செய்தபோது, இவர்கள் எப்படி விடுபட்டனர் என்று தெரியவில்லை.
வேலை வாய்ப்பு இயக்குனரகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாதது தான் இந்த குழப்பங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது கூடுதலாக பெறப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்த வேண்டிய கட்டாயம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எழுந்துள்ளது.
ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, பதிவு மூப்பில் முதலிடத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டதாக கனவில் இருப்பர். ஆனால், தற்போதைய பட்டியலில் இருப்பவர்கள் பதிவு மூப்பில் முதலில் இருந்தால் இவர்களுக்குத் தான் வேலை கிடைக்கும். இதனால் பதிவு மூப்பு பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us