தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் கூட்டத் தொடரில் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம்!

வரும் கூட்டத் தொடரில் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம்!

வரும் கூட்டத் தொடரில் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம்!


UPDATED : அக் 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தகவலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. விருப்பப்பட்ட பாடக் கல்வித் திட்டத்தை (சி.பி.சி.எஸ்.,) செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்லூரி முதல்வர்கள் எடுத்துரைத்தனர்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் பொன்முடி, சி.பி.சி.எஸ்., திட்டத்தை செயல்படுத்தும் முறையை கல்லூரி முதல்வர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது முதல்வர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முறையாகக் கண்காணிக்கவில்லை என்பதும் தெரிகிறது என்று குற்றம்சாட்டினார்.


பின்னர் நிருபர்களிடம் பொன்முடி கூறியதாவது:


சி.பி.சி.எஸ்., திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விருப்பப் பாடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.


கிளஸ்டர் முறையில் சில கல்லூரிகள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ள இம்முறைக்குத் தேவையான ஏற்பாடுகளை பல்கலைக்கழகங்கள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தொழில்நுட்பப் படிப்பை கூடுதலாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பட்டயப் படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பாக இவை வழங்கப்படும். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வை மாணவர்கள் எழுதி பட்டயம் அல்லது சான்றிதழைப் பெறலாம்.


பிஎச்.டி., ஆய்வுத் தலைபபிற்கு அனுமதி வழங்க அமைக்கப்படும் கமிட்டியின் அனுமதியைப் பெற்ற பிறகே, பிஎச்.டி., மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


பட்டமளிப்பு விழா தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு கருத்துக் கேட்ட பிறகு முடிவெடுக்கப்படும்.


தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் கீழ் பி.எட்., படிப்பைத் தொடங்குவதற்கு சில பல்கலைக்கழகங்கள் அனுமதி கேட்டுள்ளன. இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.


அக்டோபர் 22ம் தேதி அனைத்துக் கலைக் கல்லூரி முதல்வர்கள் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என்றார் பொன்முடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us