தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மாதிரி வினாத்தாள் பயிற்சியால் அதிக மார்க் பெறலாம்’

‘மாதிரி வினாத்தாள் பயிற்சியால் அதிக மார்க் பெறலாம்’

‘மாதிரி வினாத்தாள் பயிற்சியால் அதிக மார்க் பெறலாம்’


UPDATED : அக் 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


வேடசந்தூர்:
மாதிரி வினாத்தாள் பயிற்சியால் அதிக மார்க் பெறலாம். கட்டுரை வடிவிலான பதில் தரும் கேள்விகளை தேர்வு செய்ய வேண்டாம் என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
டி.வி.ஆர்.,அகாடமி, எஸ். ஆர்.எம். பல்கலை., சென்னை வழங்கிய ‘தினமலர் ஜெயித்து காட்டுவோம் 2008’ நிகழ்ச்சி வேடசந்தூர் ஆர்.கே.எஸ்.கல்யாண மஹாலில் நடந்தது. தேசிய உறுதிமொழியுடன் காலை நிகழ்ச்சிகள் துவங்கின.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை:
கணிதம்-தண்டபாணி (அரசு பெண்கள் மே.நி.ப., வேடசந்தூர்): வரைபடத்தில் முழுமையாக மார்க் பெறலாம். சூத்திரங் களை மனப்பாடம் செய்து வைத்தல் நலம். கடந்த ஆண்டுகளில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு விடைகள் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

ஆங்கிலம்-எழுமலை(அரசு உயர்நிலைபள்ளி, அழகாபுரி): கட்டுரைகள், இலக்கணத்தில் பயிற்சி செய்து கொண்டால் முழு மார்க் பெறலாம். படித் ததை எழுதி எழுதி பாருங் கள். தொடர் பயிற்சி அதிக மார்க் பெற வழி செய்யும்.

அறிவியல்-ராமலிங்கம்(அரசு பெண்கள் மே.நி.ப., வேடசந்தூர்): விடை தரும்போது நேர மேலாண்மையும்,புளு பிரிண்ட் தெரிந்திருத்தலும் முக்கியம். ஒரு மார்க் வினாக்களுக்கு முதலில் பதில் தாருங்கள்.சரியாக அலகை குறிப்பது அவசியம்.

சமூக அறிவியல்-அருணாசலம் (அரசு பெண்கள் மே.நி.ப.,வேடசந்தூர்): வரைபடம், காலத்தொகுப்பு, மாதிரி வினாத்தாள் மூலம் பயிற்சியால் அதிக மார்க் பெறலாம். கட்டுரை வடிவிலான பதில் தரும் கேள்விகளை தேர்வு செய்ய வேண்டாம். இவ்வாறு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனை:
ஆங்கிலம்: ஜேசுராஜாபயஸ்(நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளி, திண்டுக்கல்):
புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு பதில் தெரிந்திருந்தால் 80 சதவீத மார்க் உறுதி. கம்ப்யூட்டர்,சுற்றுச்சூழல் மாசு போன்ற கட்டுரைகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

கணிதம்-சுந்தர பாண்டியன்(எம்.எஸ்.பி., மே.நி.ப., திண்டுக்கல்): தேற்றங்களை மனப்பாடம் செய்து பாருங்கள். தொடுகோடு, இருதொடுகோடு, பெருமம்-குருமம் பயன்பாடு போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதி பயிற்சி செய்தாலே 130/200 மார்க் பெறுவது உறுதி.

இயற்பியல்-தங்கவேல்(அரசு பெண்கள் மே.நி.ப., வேடசந்தூர்): ஒரு மார்க் வினாக்களில் 10 வினாக்கள் கணக்குகளாக இருக்கும். தொடர் பயிற்சியால் இவ்வினாக்களுக்கு பதில் தரலாம். 10 மார்க் வினாக்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

வேதியியல்-நரசிங்கதி (அரசு மேல்நிலைபள்ளி, கம்பிளியம்பட்டி): தன்மதிப்பீட்டு வினாக்களுக்கு பயிற்சி செய்திருந்தால் 60 சதவீத மார்க் பெறலாம்.பாடங்கள் 1,2,5,8 மற்றும் 17 ஆகிய பாடங்களில் இருந்து அதிக வினாக்கள் அதிகமாக கேட்கப்படுகிறது.

தாவரவியல் மற்றும் விலங்கியல்-பெருமாளம்மாள்(அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, வேடசந்தூர்): முக்கிய கேள்விகளுக்கு பதில் தரும்போது அடிக் கோடிடுவது அவசியம். படங்களுடன் பதில் தரும் வினாக்களை தவிர்ப்பது நல்லது. சுற்றுச்சூழல் உயிரியல்,பயன்பாட்டு உயிரியல் பாடங்களில் அதிக மார்க் பெறலாம். இவ்வாறுஆலோசனை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us