தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊனமுற்றோர் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காத உதவி பெறும் கல்லூரிகள்!

ஊனமுற்றோர் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காத உதவி பெறும் கல்லூரிகள்!

ஊனமுற்றோர் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காத உதவி பெறும் கல்லூரிகள்!


UPDATED : அக் 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அரசுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


மாநிலத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 9,666 ஆசிரியர் பணியிடங்களும் 5,326 ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களும் உள்ளன. ஆசிரியர் பணியிடங்களில் 289 இடங்களும் ஆசிரியரல்லாத ஊழியர் பணியிடங்களில் 159 இடங்களும் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 30 ஆசிரியர்களும் 52 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் மட்டுமே ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பணிபுரிகின்றனர். இதுகுறித்து வேலூரைச் சேர்ந்த பேராசிரியர் ஐ. இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார்.


அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் மானியமாக ரூ.316.5 கோடி நிதியை அரசு வழங்குகிறது. எனினும், சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான பணி இடங்கள் நிரப்படாமல் உள்ளது துரதிருஷ்டவசமானது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


ஊனமுற்றோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காலி இடங்களைப் பூர்த்தி செய்யாமல், மற்ற பணியிடங்களைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊனமுற்றோர் நலச் சட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் உள்ள பணிகளில் ஊனமுற்றோருக்காக 3 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒரே கல்லூரி மட்டும்தான் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது.


131 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 119 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் ஆசிரியரல்லாத ஒரு ஊழியர்கூட நியமிக்கப்படவில்லை என்பதையும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் இளங்கோவனின் மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, நீதிபதி எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச், அரசுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், உடற்கல்வியியல் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசு நூறு சதவீத மானியம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us