தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கல்லூரிகளிலிருந்து மாறுதல் பெற புதிய விதிமுறைகள்!

இன்ஜினியரிங் கல்லூரிகளிலிருந்து மாறுதல் பெற புதிய விதிமுறைகள்!

இன்ஜினியரிங் கல்லூரிகளிலிருந்து மாறுதல் பெற புதிய விதிமுறைகள்!


UPDATED : அக் 31, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தொழில்நுட்பக் கல்வி ஆணையரின், பரிந்துரையை ஏற்று, தமிழக பொறியியல் கல்லூரிகளில், பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி மாறுதல் / பாடப்பிரிவு மாறுதல் தொடர்பாக, 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட நெறிமுறைகளில், தற்போது மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இந்த மாற்றம் 2008-09ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்.
புதிய உத்தரவின்படி, அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றல் பெறலாம். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாற்றல் பெற முடியும்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளுக்கோ அல்லது அந்த கல்லூரிகளில் இருந்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கோ மாறுதல் பெறலாம்.


  • கல்லூரி மாற்றம் அளிக்கப்படும்போது, மாணவர் தற்போது பயிலும் அதே பொறியியல் பாடப் பிரிவுக்கே மாற்றம் வழங்கப்படும். மாற்றம் கோரப்படும் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவின் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு உட்பட்டே மாற்றம் வழங்கப்படும்.

  • பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர் ஓராண்டு படிப்பு முடித்த பின்பே கல்லூரி மாற்றம் கோர தகுதியுடையவர் (முதலாமாண்டு பி.இ., - பி.டெக்., ரெகுலர் அல்லது நேரடி இரண்டாமாண்டு பி.இ., - பி.டெக்., முடித்திருக்க வேண்டும்).

  • கல்லூரி மாற்றம் மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் பருவங்களில் (செமஸ்டர்) அதாவது கல்வியாண்டு தொடக்கத்தில் மட்டுமே வழங்கப்படும்.

  • ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் கோரும்போது பின்வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

  • ஒரு குறிப்பிட்ட பருவத்தில் கல்லூரி மாற்றம் கோரும் மாணவர், தற்போது பயிலும் கல்லூரி எந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ அந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முந்தைய பருவத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

  • மாணவர், ஐந்து மற்றும் ஏழாம் பருவத்தில், கல்லூரி மாற்றம் கோரும்போது, மாற்றம் கோரப்படும் கல்லூரி இணைவுபெற்ற தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மூன்றாம் பருவத்தில் தடையின்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றம் கோரும்போது இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


மாநிலங்களுக்கிடையேயான கல்லூரி மாற்றம்:


  • மாணவர் தற்போது பயிலும் பொறியியல் கல்லூரி பிற மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில், பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

  • ஒரு குறிப்பிட்ட பருவத்தில் கல்லூரி மாற்றம் கோரும் மாணவர், தற்போது பயிலும் கல்லூரி எந்தத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ, அந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முந்தைய பருவத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

  • மாணவர் மாற்றம் கோரும் கல்லூரி இணைவு பெற்ற தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

  • கல்லூரி மாற்றம் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலமாகவே பரிசீலிக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் பாடப்பிரிவு மாற்றம் வழங்க இயலாது.

  • கல்லூரி மாற்றம் கோரப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட இரு கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

  • கல்லூரி மாற்றம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை நிர்வாக காரணங்களுக்காக ஏற்கவோ, நிராகரிக்கவோ தொழில்நுட்பக் கல்வி ஆணையருக்கு முழு அதிகாரம் உண்டு.

  • ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு இடைநீக்கத்திற்குப் பிறகு அளிக்கப்படும் மாற்றம் பட்டப் படிப்பிற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தால், நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு உட்பட்டது.

  • கல்லூரி மாற்றம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர் தற்போது பயிலும் கல்லாரியிலேயே தொடர்ந்து பயில வேண்டும்.

  • நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் எவ்வகையான கல்லூரி மாற்றமும் கோர இயலாது.

  • மறு சேர்க்கையுடன் கூடிய கல்லூரி மாற்றத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் பொருந்தும். பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எஸ்சி., பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி மாற்றம் அளிக்க இயலாது.

இவ்வாறு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us