விரைவில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தமிழ் பாடத்திட்டம்!
விரைவில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தமிழ் பாடத்திட்டம்!
UPDATED : நவ 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழக அரசின் உத்தரவின்படி, இதற்கான பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பணியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது என்று துணைவேந்தர் மா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, பி.ஏ., எம்.ஏ., தமிழ் பட்டப் படிப்புகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியை தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் முதலாவது மத்திய கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளையொட்டி விவாதக் கூட்டத்திற்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் செய்தி மடலில் ஆய்வுக் கட்டுரைகள் குறித்த விவரங்கள் இடம் பெறும். இவற்றை பல்கலைக்கழக இணைய தளத்திலும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் துணைவேந்தர் ராஜேந்திரன்.
