வெளிநாட்டுத் தேர்வுகளில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய மாணவர்கள்
வெளிநாட்டுத் தேர்வுகளில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய மாணவர்கள்
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலகெங்கும் உள்ள 156 நாடுகளில் உள்ள மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘இன்டர்நேஷனல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜுகேஷன்’ (IGSE) தேர்வில் இரண்டு பாடங்களில் இந்திய மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் “திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி (DIAS)யைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பள்ளியைச் சார்ந்த 4 மாணவர்கள் இந்திய அளவிலான தேர்வுகளில் முதலிடம் பெற்றுள்ளனர். இத்தேர்வுகளை யுனிவர்சிட்டி ஆப் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் எக்ஸாம் (CIE) என்ற அமைப்பு நடத்துகிறது.
இந்தியாவைச் சார்ந்த மாணவர்களின் சாரசரி மதிப்பெண் விகிதம், மற்ற உலக நாடுகளின் சராசரியைவிட இருமடங்கு உள்ளதாகவும், ‘ஏ’ பிரிவு மதிப்பெண் பெறும் மாணவர்களின் விகிதம் இந்தியாவில் 15 சதவீதமாகவும், பிற நாடுகளின் 7 சதவீதமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மாபெரும் சாதனையைச் செய்த மாணவர்களைப் பாராட்டும் விதத்தில் டயஸ் பள்ளியில் சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தப் பள்ளி மாணவர்கள் மிகச் சிறந்த தேர்ச்சியை வெளியிட்டுவருவதாகவும், தொடர் வளர்ச்சி கண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்பள்ளியின் படிப்புகளில் தியரிடிகல் படிப்பு மற்றும் ஹேண்ட்ஸ்-ஆன் பிராக்டிகல் முறையிலான உத்திகள் கையாளப்படுகின்றன. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதத்தில் கேஸ் ஸ்டடிகளும், தொழில்சார்ந்த புராஜக்ட்களும் பாடப்பகுதிகளாக உள்ளன.
இவ்வாறு போட்டித் தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களை சுயேச்சையான பயிற்சியாளர் களாகவம், விருப்பத்திற்கேற்ப பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வகையிலும் தயார் செய்ய முடிவதாக சி.ஐ.இ. தெரிவித்துள்ளது. பாடங் களை பிராக்டிகல் பயிற்சிகளுடன் படிப்பதன் மூலம் இருக்கும் பிரச்னைகளுடன், வரவிருக்கும் பிரச்னைகளையும் அறிய முடியும் என்ற கருத்து நிலவுகிறது.
இப்போட்டித் தேர்வுகளை உலகெங்கும் உள்ள 13 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பதும், இதில் இந்தியர் 15 ஆயிரம் பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
