தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைவருக்கும் வேலை கோழிக்கோடு ஐ.ஐ.எம்., சாதனை!

அனைவருக்கும் வேலை கோழிக்கோடு ஐ.ஐ.எம்., சாதனை!

அனைவருக்கும் வேலை கோழிக்கோடு ஐ.ஐ.எம்., சாதனை!


UPDATED : நவ 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் பயிலும் மாணவர்களில் 2010ம் ஆண்டுக்கான பணி நியமனங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
உலகெங்கும் பரவலாகப் பேசப் படும் பொருளாதாரச் சிக்கல்களையும் தாண்டி 200810 ஆம் ஆண்டு மாணவர்களைப் பணி நியமனம் செய்து கொள்ள உலகெங்கிலுமுள்ள நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கின.
கடந்த ஆண்டு 66 நிறுவனங்கள் இங்கு கேம்பஸ் இண்டர்வியூ வந்திருந்தன. இந்த ஆண்டு 102 நிறுவனங்கள் வந்து அங்கு பயிலும் 261 மாணவர்களுக்குப் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. பணிவாய்ப்புகள் வெட்டப்படும், ஐ.ஐ.எம்.,மின் மாணவர் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் பணி வழங்கப் போட்டியிடும் நிலை ஆச்சரியமானதாகவே உள்ளது. ஆனால், இந்த நிலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
இந்த கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் குழு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பணி வழங்கும் கமிட்டி, இக்கல்வி நிறுவனத்தின் தொழில்முறை பங்கு
தாரர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த மற்றும் விடாமுயற்சியே இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஐ.ஐ.எம்., கோழிக்கோட்டில் பாடங்களை நடத்துவதோடு மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை முன்னேற்றுவது, தரக்கட்டுப்பாடு, தரமேம்பாடு ஆகிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இதனாலேயே இம்மாணவர்களுக்கு பணி தருவதற்கு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
2009ம் ஆண்டில் இங்கு படித்த 14 மாணவர்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங், ஜெர்மனி, துபாய், தென் ஆப்ரிக்கா, லண்டன் போன்ற வெளிநாட்டு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டின் நிகழ்வுகளும் ஐ.ஐ.எம்., கோழிக்கோட்டின் தரத்தையும் வாய்ப்புகளையும் பறைசாற்றுவதாகவே உள்ளது. கேம்பஸ் முறையை உரிய காலத்திற்குள் முடிப்பதில் இது மிகுந்த அக்கறை செலுத்துகிறது. இக்கல்வி நிறுவனத்தின் தரத்தைக் கருத்தில் கொண்டு சிட்டி பாங்க், ஸ்டாண்டர்டு சார்டட் பாங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்ஸிஸ் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்க் போன்ற வங்கிகள் பணி வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.
இது தவிர்த்து ஜே.பி.,மார்கன், டச்சு பாங்க் போன்ற நிதிமூலதன வங்கி
களிலும் இந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஸ்ட்ராடஜி மற்றும் கன்சல்டிங் பிரிவுகளிலேயே பணிபுரிகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பாகும். பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகிய டீலாய்ட், ஹீவிட், பிரைஸ் வாட்டர் போன்றவை இவ்விதப் பணிகளுக்கு ஐ.ஐ.எம்., கோழிக்கோடு மாணவர்களையே சார்ந்திருக்கின்றன. ஐ.ஐ.எம்., கோழிக்கோட்டைச் சேர்ந்த 20 சதவீத மாணவர்களை கன்சல்டிங் அண்டு ஸ்ட்ராட்ஜி பிரிவுகளில் பணியிலமர்த்த புகழ்பெற்ற ஐ.டி., நிறுவனங்களாகிய விப்ரோ, ஐ.பி.எம்., போன்றவை முயன்று வருகின்றன. மார்கெட்டிங் நிறுவனங்களின் மத்தியிலும் இக்கல்வி நிறுவன மாணவர்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. இதனாலேயே இந்நிறுவனங்கள் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையில் இக்கல்வி நிறுவனத்தை முற்றுகையிடுகின்றன.
உரிய காலத்தில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவது, தகுதியுடைய அனைவருக்கும் உரிய வேலையைப் பெற்றுத்  தருவது, வேலை தரும் நிறுவனங்களுடன் ஆரோக்கியமான உறவை வளர்ப்பது என்ற பல மட்டங்களில் சிறப்பாக செயல்படும் ஐ.ஐ.எம்., கோழிக்கோடு நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒரு அரிய கல்விநிறுவனமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us