‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சியால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்
‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சியால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ராமநாதபுரம்: தினமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம் ’நிகழ்ச்சியால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் எம்.ஜி. மஹாலில் டி.வி.ஆர்.,அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கருத்துக்கள்:
ஆர். பிரியா ( ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி) : நான் விடுதியில் தங்கி படித்தாலும் தினமும் நடத்தப்பட்ட பாடங்களில் உள்ள கேள்வி பதில்களை உடனுக்குடன் படித்து விடுவேன். சிறந்த டாக்டராக வேண்டும் என்பதே எனது லட்சியம்.
வி.காயத்திரி (புனித ஜோசப் உயர்நிலை பள்ளி முத்துப்பேட்டை) : எனது படிப்புக்காக என்னை விட எனது தந்தை அதிக அக்கறை எடுத்து கொள்கிறார். தேர்வில் 460 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்.படித்து நல்ல நிலைக்கு வருவேன். எனது தந்தையையும் கடைசி வரை காப்பாற்றுவேன்.
எம்.பிரியா (அரசு மேல்நிலைப்பள்ளி ,உச்சிப்புளி) : எனது தந்தை உயிரோடு இல்லை.இல்லாவிட்டாலும் ஆசிரியர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி அதிக மதிப்பெண் எடுப்பேன். கலெக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை.
சி.சரத்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி, இருமேனி) : ஒவ்வொரு நாளும் பாடங்களுக்கு நேரம் ஒதுக்கி படித்து வருகிறேன். நாளைய அப்துல்கலாமாக வர முயற்ச்சிப்பேன்.
எஸ். ஷாருக்கான் ( அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர். எஸ். மங்கலம் ) : நன்றாக படித்து கம்ப்யூட்டர் இன்ஜினியராகி இந்தியாவில் பணிபுரியவேண்டும் வேண்டும் என்பதே ஆசை.
பிளஸ் 2 மாணவர்களின் கருத்துக்கள் :
எஸ். முனியசாமி ( அரசு மேல்நிலைப்பள்ளி ,சிக்கல் ) : எனது தந்தை விவசாயி. ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்ட பாடங்களை உடனே படித்து விடுவேன். கணக்கு வகுப்புகளை புறக்கணிக்க மாட்டேன்.
டி.தினேஷ்குமார் ( அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்க்காவனுõர் ) : ஒவ்வொரு பாடத்தையும் மிகுந்த அக்கறையுடன் படித்து விடுவேன்.நல்ல நிலைமை அடைந்து பெற்றோரை கடைசி வரை காப்பாற்றுவேன்.
எம்.அஞ்சுகவல்லி ( அரசு மேல்நிலைப்பள்ளி, புதுமடம்) : தினமும் காலை சீக்கரம் எழுந்து விடுவேன். காலையில் அதிக நேரம் படிப்பதால் நன்றாகபுரிகிறது. அதிக மதிப்பெண்கள் எடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
டி. சித்ராதேவி ( அரசு மேல் நிலைப் பள்ளி, உச்சிப்புளி) : எனது பெற்றோர் படிக்கவில்லை என்றாலும் அவர்களது ஆசையை நிச்சயமாக பூர்த்தி செய்வேன். அதிக மதிப்பெண் எடுத்து நாட்டு மக்களுக்கு சேவை செய்வேன்.
பி.ரகுணாதேவி ( அரசு மேல்நிலைப் பள்ளி, சிக்கல் ): தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படித்து வருகிறேன். அதிக மதிப்பெண் எடுப்பேன் என்ற நம்பிக்கை தினமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம் ’நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அதிகமாகிவிட்டது.
