தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலையை கலக்கிய மாணவர்கள்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் உற்சாகம்

பல்கலையை கலக்கிய மாணவர்கள்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் உற்சாகம்

பல்கலையை கலக்கிய மாணவர்கள்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் உற்சாகம்


UPDATED : நவ 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இரு பிரிவாக நடந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நவ. 15,16, 19 ஆகிய மூன்று நாட்களில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் பாடங்களுடன், மாணவர்களைத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில், சிறப்பு அழைப்பாளர்களின் தன்னம்பிக்கை உரைகளும் இடம்பெற்றன. முதல் இரண்டு நாள், அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 19ம் தேதியும், 20ம் தேதியும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்பட்டன. 19ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு பிரிவாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நவ. 20ம் தேதி நடந்தது. காலையில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் பிரபா ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினர். பிற்பகலில் கலைப்பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் திரண்டு வந்திருந்தனர்.
கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்ற மாணவி கல்பனா (1149), இரண்டாம் இடம் பெற்ற மாணவி ரம்யா (1141), மூன்றாம் இடம்பெற்ற மாணவர் ஜெயக்குமார் (1126) ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்துடன் கூடிய பரிசுகளை, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
மூன்று மாணவர்களும் பேசும்போது, தங்களுடைய சாதனைக்கு ஆசிரியர்களே முதல் காரணம் என்று குறிப்பிட்டு, நன்றி தெரிவித்தனர். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ரம்யா பி.காம்., படித்து வருகிறார். குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியில் கல்பனாவும், கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் ஜெயக்குமாரும் படித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ரமேஷ் பிரபா, “மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களாலும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த மாணவர்கள் திகழ்கின்றனர். இவர்களைப் போல் நீங்களும் கடுமையாக உழைத்தால் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியிலும், கலாம் படித்த எம்.ஐ.டி., கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியும்,” என்றார்.
ரமேஷ் பிரபா மேலும் குறிப்பிட்டதாவது:
தமிழகத்தில் 350 இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக ‘சீட்’ கிடைக்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை பார்த்திருக்கிறேன். குழு குழுவாக கவுன்சிலிங் நடக்கும். 0.1 மதிப்பெண் கூடுதலாக பெற்ற மாணவர்கள் முதலில் சென்று, அவர்கள் விரும்பிய கல்லூரிகளையும், விரும்பிய படிப்புகளையும் தேர்வு செய்துவிடுவர். அவர்களை விட 0.1 மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங் செல்லும்போது, அவர்கள் விரும்பிய கல்லூரிகளும் இருக்காது; பாடப் பிரிவுகளும் இருக்காது. இதுதான் உண்மை.
எனவே, நீங்கள் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண்களைக் கூட கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்நிகழ்ச்சியை தினமலர் ஆசிரியர் நடத்துகிறார். இதை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளில் 95 மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்களை சேர்த்து 98 மதிப்பெண்கள் பெற வைப்பர். ஆனால், மாநகராட்சி பள்ளிகளில் 20 மதிப்பெண், 30 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை எல்லாம் சேர்த்து, அவர்கள் 80 மதிப்பெண்களும், 90 மதிப்பெண்களும் எடுக்கும் அளவிற்கு வளர்க்கின்றனர்.
எனவே, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது. சினிமாவைப் பார்த்து கெட்டுவீடாதீர்கள். உங்களை நம்பி கனவு காணும் பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் நினைத்துப் பாருங்கள். அப்படி நினைத்தால் தவறான பாதையில் செல்ல மாட்டீர்கள்; வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us